சென்னை: பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை. தமிழக காவல்துறையினர் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள் நவீனமாக தான் உள்ளது. பிற மாநிலங்கள் தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு உபகரணங்களை கேட்டு வாங்கக் கூடிய அளவிற்கு நம்மிடம் அதிக அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் தரமானதாக உள்ளது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது சைபர் க்ரைம் மோசடியில் ஒரு எல்லை என்பதே கிடையாது. எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி செய்யலாம். எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம். சைபர் க்ரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். எந்த ஒரு வங்கியும் ஓடிபி எண் கேட்பது கிடையாது. எனவே ஓடிபி (One-time password) எண் யாராவது கேட்டால் பகிரக்கூடாது எனவும் இதன் மூலம் தான் குற்றங்கள் நிகழ்கிறது எனவும் தெரிவித்தார். 


எனவே ஆசை வார்த்தை கூறுபவர்களின் உண்மைத் தன்மை அறிந்த நாம் விழிப்போடு இருக்க வேண்டும். தமிழகத்தில் சைபர் க்ரைம் குற்றம் தொடர்பாக 46 காவல் நிலையம் உள்ளது. பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றம் தொடர்காக இந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கலாம் என்றார்.


மேலும் படிக்க: அனைத்து பழியையும் ஆளுநர் மீது போட்டு தப்பிக்க முடியாது - திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை


இதனைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் உள்ள எல்லா மக்களிடமும் செல்போன் உள்ளது இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளது. எனவே உலகத்தில் உள்ள எந்த நபரும் ம் நம் வங்கியில் உள்ள பணத்தை திருடலாம். வெளிநாட்டில் போதைப் பொருள் ஏற்றுமதி செய்தது தொடர்பாக உங்களது வங்கிக்கு வங்கிக்கு பணம் வந்துள்ளது என்று உங்களுடைய ஆதார் எண் கொடுங்கள் என்று உங்கள் வங்கியில் உள்ள பணத்தை மோசடி செய்யலாம்.


தற்போது,  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை எனவே உங்களது மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கூறி நாங்கள் அனுப்புகிற லிங்கில் பத்து ரூபாய் செலுத்துங்கள் உங்களது மின் கட்டணம் துண்டிக்கப்படாது. மின் இணைப்பை மீண்டும் பெற நாம் அவர்கள் கொடுத்த லிங்கிற்கு பத்து ரூபாய் அனுப்பினால் நமது வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் அவர்கள் எடுத்து விடுவார்கள்.  


அதுபோல் கலெக்டர், டிஜிபி பேசுவதாக கூறி மோசடி நடைபெறுகிறது. நம்மை ஏமாற்றுபவர்கள் வெளிநாட்டில் கூட இருக்கலாம். சைபர் குற்றங்களில் ஏமாற்றப்பட்டால் 1930 இந்த எண்ணிற்கு புகார் கொடுக்கலாம் என்றார். 


மேலும் படிக்க: போலி ஆவணங்களை சமர்ப்பித்தாரா தனுஷ்? விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!


பிரதமர் தமிழக வருகையின் போது பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை. இது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் எந்த கண்டிஷனில் உள்ளது என்பது குறித்து தணிக்கை செய்யப்படுகிறது. உபயோகமில்லாத உபகரணங்கள் உடனடியாக தவிர்க்கப்படுகிறது. தமிழகத்தில் தான் பிற மாநிலங்களை விட பாதுகாப்பு உபகரணங்கள் அதிக அளவில் உள்ளது. பிற மாநிலங்கள் தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு உபகரணங்களை கேட்டு வாங்கக் கூடிய அளவிற்கு நம்மிடம் அதிக அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் தரமானதாக உள்ளது. அந்தமான், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் தமிழக காவல்துறையே பாதுகாப்புக்கு செல்கிறது.


வட மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து வேலை செய்பவர்கள் அதிகம் குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள் என்பது தொடர்பான கேள்விக்கு, பொத்தாம் பொதுவாக அப்படி சொல்ல முடியாது. வட மாநிலத்தவர் ஒரு சிலர் குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 


முன்னதாக ஜூலை மாதம் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவையொட்டி பிரதமர் மோடி ஜூலை மாதம் தமிழகம் வந்திருந்தபோது தமிழக காவல்துறையினரின் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: மக்களே உஷார் - 5ஆம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.... வானிலை ஆய்வு மையம் அலெர்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ