தமிழக அரசு, அதன் பாராம் தாங்காமல் தானாகவே கவிழும் என ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் அளித்த பேட்டி:-


தமிழகத்தில் சட்டமும் இல்லை. ஒழுங்கும் இல்லை. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று உள்ளதா என்ற நிலை நிலவுகிறது. தமிழகத்தில் மர்மமான மரணங்கள் தொடர்கிறது. கோடையில் மக்களை வாட்டி வதைக்கும் குடிநீர் பிரச்னைக்கு எடப்பாடி நடவடிக்கை எடுப்பதில்லை.


அமைச்சர்கள் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்படுகிறன்றன. விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காமராஜ் மீது வழக்கு, சரோஜா, பெண் அதிகாரியிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். அமைச்சர்கள் அனைவரும் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். ஜெயலலிதா இருந்த போது ராணுவ கட்டுப்பாட்டுடன் அனைவரும் செயல்பட்டனர். ஆனால், தற்போது அனைவரும் இஷ்டம் போல் செயல்படுகின்றனர். 


ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. சட்டசபை தேர்தல் விரைவில் வரும் ஒ.பி.எஸ்., விரைவில் அமைச்சராவார். இரட்டை இலை சின்னம் எங்களிடம் வரும். தொண்டர்களை பற்றி தான்கவலைப்படுகின்றோம். தமிழக அரசு அதன் பாரம் தாங்காமல் தானாகவே கவிழும். 


இவ்வாறு அவர் கூறினார்.