கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் வெளியாகியது. ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் உத்தரகாண்டிவில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தமிழகத்துக்கு பிளாஸ்டிக் அரிசி வராமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-


தமிழகத்தில் நுகர்வோர் தேவைக்கேற்ப 3 லட்சத்து 18 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி ரே‌ஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் அரிசி விலையும் கட்டுக்குள் இருக்கிறது.


எனவே தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படவில்லை. இங்கு பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புழுங்கல் அரிசி, பச்சரிசி ஆகியவை கிடைக்கிறது.


பிளாஸ்டிக் அரிசியை யாராவது விற்பனை செய்வதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


பாஸ்ட்புட் உணவகங்களில் பிரைட்ரைசுக்கு பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அது போன்ற குற்றச்சாட்டு உண்மையானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.