கருணாநிதி உடல்நிலை காலையில் பின்னடைவு; தற்போது முன்னேற்றம்!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார் -தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.ஏ.திருநாவுக்கரசர்!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார் -தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.ஏ.திருநாவுக்கரசர்!
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த பத்து நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
இதை தொடர்ந்து, காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இன்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கல்லீரல் செயல்பாடு குறைந்து வருவதாகவும், இதனால் மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானதையடுத்து காவேரி மருத்துவமனைக்கு திமுக தலைவர் மனைவி தயாளு அம்மாள் வந்திந்தார்.
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் திமுகதலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகைதந்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறிய போது; திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது கண்காணிப்பில் உள்ளார். இவர் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது காவிரி மருத்துவமனைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கருணாநிதி குடும்ப மருத்துவர்வருகை தந்துள்ளார். இதனால், திமுக தொண்டர்கள் அனைவரும் பதட்டத்தில் உள்ளனர்.