தளி வாய்க்கால் பாசனத்திற்காக திருமூர்த்தி அணை திறப்பு!
தளி வாய்க்கால் பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது!
தளி வாய்க்கால் பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது!
திருப்பூர் மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட, தளி வாய்க்கால் வடபூதிநத்தம் விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்கள் வேண்டுகோள் வைத்ததன் பேரில் திருப்பூர் மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப் படும் என தமிழக முதல்வர் எடப்பாட பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
வரும் 23.08.2018 முதல் 31.05.2019 வரை மொத்தம் 700 மி.க.அடிக்கு மிகாமல் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேப்போல் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் ஆலாம்பாளையம் கிராமம் பூரிநாயக்கன் ஏரிப் பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து 39.87 மிகஅடி-க்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்படும் எனவும், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு 23.08.2018 முதல் மொத்தம் 9500 மிகஅடி-க்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்படும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திறந்துவிடப்படும் தண்ணீரினை பெருமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.