அதிமுக நிலை கவலை தருகிறது - கவலைப்படும் காங்கிரஸ் எம்.பி.,
அதிமுகவின் நிலை தனக்கு வருத்தம் அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி.யும், அதிமுகவின் முன்னாள் உறுப்பினருமான திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் நாற்காலியை எடப்பாடி பழனிசாமி நெருங்கிவிட்டார். ஆனால் தன்னால் முடிந்த அளவு அதனைத் தடுப்பதற்கு ஓபிஎஸ்ஸும் தன்னால் முடிந்த அளவு முயன்று கொண்டிருக்கிறார்.
இருந்தாலும் கட்சியில் பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்பை அழைக்காமல் இன்று கூட்டமும் நடந்தது. இதனையடுத்து நாளை ஓபிஎஸ் போட்டி கூட்டம் நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி இருவரும் மாறி மாறி அதிகார போட்டிக்கு அடித்துகொண்டிருப்பதால் தொண்டர்கள் குழப்பமும், விரக்தியும் அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போதைய காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவுமான திருநாவுக்கரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அதிமுக விவகாரம் குறித்து பேசிய அவர், “அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து, நான் ஏற்கனவே அந்த கட்சியில் இருந்தவர் என்ற முறையில் எனக்கு கவலையையும் வருத்தத்தையும் தருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய முடியாது. அதுபோல் ஒற்றை தலைமையால் மட்டுமே வழிநடத்த முடியும், இது எனது இலவச அறிவுரை.
அதேவேளையில் யார் அந்த ஒற்றை தலைமை என்பதை கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும்தான் முடிவு செய்ய வேண்டும். கட்சியில் தலைமைப் பொறுப்புக்கான ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதற்கு அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று அவர்களுக்கான நியாயமான தீர்ப்பை பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.
மேலும் படிக்க | கட்சி பிளவுப்பட்டால்... எம்ஜிஆர் உயிலில் சொல்லியிருப்பது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR