சென்னை: திருவள்ளூரைச் (Thiruvallur) சேர்ந்த நான்கு கல்லூரி மாணவர்கள், CooRo (Corona + Robot) என்ற சானிடிசர் தெளிக்கும் மினி ரோபோவை வடிவமைத்துள்ளனர். இதை இந்த மாணவர்கள் திருவள்ளூர் நகர காவல்துறை முன் ஞாயிற்றுக்கிழமையன்று இயக்கிக் காட்டினார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த செயல்திட்டத்திற்காக தள்ளுபடி விலையில் சக்கரங்களை வாங்க முயற்சித்த இந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. பின்னர் இவர்கள் இந்த ரோபோவை ஸ்க்ராப் பொருட்கள் அதாவது மற்றவர்கள் தேவையில்லை என வீசிய பொருட்களை வைத்து செய்தார்கள்.  


"இதன் 80 சதவிகித பாகங்கள் ஒரு ஜங்-யார்டில் இருந்து பெறப்பட்டவை. மேலும் இந்த சாதனத்தின் 90 சதவிகிதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது" என்று மாணவர்கள் கூறுகின்றனர்.


ALSO READ: தமிழகத்தில் ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ் விநியோகம்...!


“நாங்கள் சீன தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடிவு செய்தோம். இருப்பினும், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு டிரான்ஸ்மிட்டரை நாங்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது. ரோபோவைக் கட்டுப்படுத்த ஒரு மொபைல் செயலியையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என்கிறார் பெங்களூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் எஸ்.சந்தோஷ் குமார் (19). இந்த செயலியின் உதவியுடன் 20 அடி தூரத்திலிருந்து கூட ரோபோவைக் கட்டுப்படுத்தலாம்.


இருப்பினும், ரிமோட் வழியாக ஒருவர் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் அதை இயக்க முடியும். கன்சர்வேன்சி தொழிலாளர்களை துப்புறவுப் பணியாளர்களுக்கு செல்ல கடினமாக இருகக்கும் சில இடங்களில் இவற்றை பயன்படுத்தலாம். கட்டுப்பாட்டு மண்டலங்கள் / வீடுகள் மற்றும் குறுகிய தெருக்களுக்கு முன்னால் சானிடிசரை தெளிக்க இந்த ரோபோவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ரோபோவைத் தயாரித்த நான்கு பேர் கொண்ட குழுவில் சந்தோஷும் ஒருவர். மற்ற நபரான ஈ கோகுல் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியலைப் பயின்று வருகிறார். அவர்களது நண்பன் கெ.செந்தில் குமார் ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார். உள்ளடக்கத்தை தயார் செய்யவும் வரவு செலவு கணக்குகளை பராமரிக்கவும் இவர்களுக்கு அவர் உதவுகிறார்.


இந்த நான்கு பேரும் ஏற்கனவே ஒரு ட்ரோனை வடிவமைத்திருந்தனர். அவர்களின் முன்மாதிரி சுனாமி எச்சரிக்கை அலாரம் தென்னிந்தியா மட்டத்தில் இஸ்ரோவால் (ISRO) பட்டியலிடப்பட்டது. இளைஞர்கள் தங்கள் ரோபோவை முழுமையான, உபயோகமான பயன்பாட்டில் ஈடுபடுத்த மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.


ALSO READ: சென்னை முதல் குமரி வரை மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்!!