திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன்  தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாது கார்த்திகை மகா தீபத்திருவிழா. இந்த விழாவானது இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 7.05 மணிக்குள் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. சிவாச்சாரியார்கள் தங்க கொடி மரத்தில் கொடியேற்றினர்.


திருவண்ணாமலையில் இன்று காலை கொடியேற்றத்தின் போதும் மழை பெய்தது. இந்த கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மகா தீபம் வருகிற 10-ந்தேதி ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.