Thiruvotriyur School Gas Leak News | வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் செயல்பட்டு வரும் விக்டரி பள்ளியில் கடந்த 10 நாட்களூக்கு முன்னராக திடீரென வாயு கசிவு ஏற்பட்டு 35 மாணவிகள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இந்நிலையில் சம்பவ தினத்தில்  தேசிய பேரிடம் மீட்பு படையினர் நேரில் பள்ளிக்கு வந்து ஆய்வு கூடம் கழிவறை குளிர்சாதனப்பெட்டி போன்றவற்றை ஆய்வு செய்து விட்டு வாயு எங்கிருந்து கசிந்தது என தெரியவில்லை என கூறினார். தொடர்ந்து அடுத்ததுடுத்த தினங்கள் வரை மாவட்ட கல்வி அலுவலர் முருகன் ஆய்வு மேற்கொண்டார். மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் ராட்சத இயந்திரம் கொண்டு வந்து காற்றில் இருக்ககூடிய நச்சுதன்மை வாயுக்களின் தரம் அறியும் இயந்திரம் கொண்டு சோதனை செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிட்டதட்ட 10 நாட்கள் கழித்து பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் இன்று பள்ளி திறக்கப்படுகிறது என்ற குறுஞ்செய்தி அனுப்பபட்டு பள்ளியின் நுழைவு வாயிலில் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்து அவரது பரிந்துரையின் பேரிலேயே பள்ளி திறக்கப்படுகிறது என்ற சுற்றறிக்கை ஒட்டப்பட்டு பள்ளி திறக்கப்பட்டது. பெற்றோர் சிலர் பள்ளிக்கு நேரடியாக வந்து எந்த அடிப்படையில் பள்ளியை மீண்டும் திறக்கிறீர்கள்?, ஏற்கனவே நடைபெற்ற வாயு கசிவு சம்பவம் எதனால் ஏற்பட்டது என கேட்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தபோது மாணவி ஒருவர் மீண்டும் வாந்தி எடுத்த நிலையில் மயக்கமடைந்தார். தொடர்ந்து மொத்தம் 6 மாணவிகள் வாந்தி மயக்கம் எடுத்தனர்.   


மேலும் படிக்க | 'வசவாளர்கள் வாழ்க...' விஜய் குறித்து மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் - என்ன சொன்னார் பாருங்க!


உடனடியாக அந்த மாணவிகள் அருகாமையில் இருக்கக்கூடிய தனியார் மற்றும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளியில் பதட்டமான சூழலில் ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்த மொத்த குழந்தைகளின் பெற்றோர்களும் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பள்ளி நிர்வாகத்தினர்ரோடு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த சென்னை மாவட்ட கல்வி அலுவலரிடம் பெற்றோர்கள் சரமாரியா கேள்விகளைக் கேட்டு அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருபுறம் வடக்கு மண்டல ஆர்.டி.சி கட்டா ரவி தேஜா நேரில் வந்து சர்ச்சைக்குரிய அந்த பள்ளியின் வகுப்பறைகள் அமர்ந்திருக்கக் கூடிய தளத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தார். 


திருவொற்றியூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் பள்ளிக்கு வந்து ஏன் மாணவர்களின் பெற்றோர்களிடம் உரிய விளக்கம் தராமல் பள்ளியை திறந்தீர்கள்?, துரிதமாக நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? என கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது, அங்கு வந்த தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர்,  மாவட்ட கல்வி அலுவலர் முருகனிடம் பிரச்சனைக்கு காரணமே நீங்கள் தான், ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்திற்கு முழுமையான விவரங்கள் தற்போது வரை தெரியாத நிலையில் எந்த அடிப்படையில் பள்ளியை திறக்க நீங்கள் உத்தரவிட்டீர்கள்? என கேள்விகளை எழுப்பினார். மேலும், மாணவிகளின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? என்றும் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் பள்ளி உடனடியாக மூடப்பட்டது. இது குறித்து பள்ளியின் முதல்வர் வனிதா கூறும்பொழுது, அதிகாரிகள் அளித்த வாய்மொழியின் உத்தரவின் பேரில் தங்களது பள்ளியை திறந்ததாக கூறினார். பெற்றோர்கள் தரப்பில் பேசும்போது, அந்த தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், இனி இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளை படிக்க வைக்க விரும்பவில்லை, வேறொரு பள்ளியில் படிக்க வைக்க பள்ளி நிர்வாகமே நாங்கள் செலுத்திய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினர். மேலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


மேலும் படிக்க | ’தெலுங்கர்கள் அந்தபுரத்து சேவகர்கள்’ என கூறிய கஸ்தூரி இப்போது திடீர் விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ