Actress Kasthuri Video Tamil | சென்னையில் நடைபெற்ற பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரும் ஆர்பாட்டத்தில் நடிகை கஸ்தூரியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. தெலுங்கர்கள் மன்னர்களுக்கு அந்தபுரத்து சேவை செய்ய தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் என அவர் பேசியது, அரசியல் தளத்திலும், தெலுங்கு மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நான் அப்படியான பொருளில் பேசவே இல்லை எனவும், அதனை திரித்து கூறுகிறார்கள் எனவும் கஸ்தூரி இப்போது தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கவுரை கொடுத்திருக்கிறார். இருப்பினும் கஸ்தூரி பேசும் வீடியோவில் அவர் அந்த அர்த்தத்திலேயே பேசியிருப்பது தெளிவாக இருக்கிறது.
மேலும் படிக்க | அமரன் படம் வெறுப்பை விதைக்கும் ஒரு அரசியல் அஜெண்டா - எஸ்டிபிஐ குற்றச்சாட்டு!
சென்னை எழும்பூரில் தமிழ்நாட்டில் பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, " 300 வருடங்களுக்கு முன்பு மன்னர்களின் அந்தபுரத்து மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு தமிழர்கள் இனம் அப்படினு சொல்லும்போது, எப்போவோ வந்த பிராமணர்களை எல்லாம் தமிழர்கள் இல்லைனு சொல்ல நீங்க யாருங்க தமிழர்கள்?. நீங்க யாரு தமிழர்கள்?" என ஆவேசமாக பேசினார். கஸ்தூரின் இந்த பேச்சைக் கேட்டு அங்கு போராட்டத்தில் கலந்து கொண்ட பிராமணர்கள் உள்ளிட்டோரும் கைத்தட்டி அமோதித்தனர்.
ஆனால், கஸ்தூரியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பாஜகவில் இருக்கும் தெலுங்கு மொழி பேசும் நிர்வாகிகளே கஸ்தூரியின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதுதவிர, ஆந்திரா, தெலங்கானாவில் கஸ்தூரியின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார் நடிகை கஸ்தூரி. தன்னுடைய பேச்சு திரித்து பரப்பப்பட்டுள்ளதாகவும், தெலுங்கு மொழி பேசும் மக்கள் மீது மரியாதை இருப்பதாகவும், அவர்களை அவமதிக்கும் வகையில் நான் பேசவே இல்லை என தெரிவித்துள்ளார்.
இதற்காக செய்தியாளர்கள் சந்திப்பையும் நடத்தி நடிகை கஸ்தூரி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், " என் புகுந்த வீடு தெலுங்கு. என் மகள்களுக்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளும் இரண்டு கண்கள். எனக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரச்சாரம் இது. எத்தனையோ பொய்களை பார்த்துவிட்டேன். இதற்கு அச்சப்படமாட்டேன். தெலுங்கு மக்கள் குறித்து நான் அவதூறாக எதுவும் பேசவில்லை. அது திரித்து பரப்பப்படுகிறது" என கஸ்தூரி கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ