பிளாக்கில் மது கிடைக்காததால் ஆத்திரம்..! பார் ஊழியர் கொலை

தூத்துக்குடியில் பிளாக்கில் மது கிடைக்காத ஆத்திரத்தில், பார் ஊழியர் ஒருவரை இளைஞர்கள் கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி இன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர், பிளாக்கில் மதுவாங்கி குடித்துவிட வேண்டும் என்பதற்காக, நகரம் முழுவதும் இருக்கும் ஒவ்வொரு பாருக்காக சென்று மது கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ALSO READ | சர்க்கரை நோயாளிக்கு சாக்லெட் டெலிவரி செய்த அமேசான்..!
கடைசியாக சின்னகண்ணுபுரம் பகுதியில் இருக்கும் பாருக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஊழியரிடம் மது கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பார் ஊழியருக்கும், இளைஞர்களுக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்ற இளைஞர்கள், மீண்டும் சிறிது நேரத்தில் திரும்பி வந்து செல்வராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு செல்வராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
ALSO READ | நிஜத்தில் ஒரு காதல்கோட்டை; எதிர்ப்பை மீறி மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பெண்
இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். செல்வராஜை இளைஞர்கள் வெட்டும்போது தடுக்க முயற்சி செய்த ராஜா, மாடசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல்துறையினர், உடனடியாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் பட்டப்பகலில் மதுவுக்காக பார் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR