தூத்துக்குடி போராட்டம்: தங்கு கடல் மீன்பிடித் தொழில் செய்ய அனுமதி வேண்டும், மீனவர்கள் கோரிக்கை
தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை: தங்களுக்கு தங்கு கடல் மீன்பிடித் தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை
தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் தாங்கள் தொழில் செய்யும் கடல் பகுதியில் கேரள மாநில விசைப்படகு மற்றும் கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் பகுதி விசைப்படகுகள் இரவு நேரங்களில் தொழில் செய்வதை தடுக்க வேண்டும் தங்களுக்கு ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடி மீனவர்கள் தொழில் செய்யும் பகுதியில் தொழில் செய்த கேரள மாநில மற்றும் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஆறு விசைப்படைகளை 86 மீனவர்களுடன் சிறை பிடித்து வைத்துள்ளனர்.
போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் இன்று காலை விசைப்படகு உரிமையாளர் போஸ்கோ என்பவரை காவல்துறையினர் திடீரென கைது செய்தனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட படகு மற்றும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
மேலும் படிக்க | மதிமுக சிட்டிங் எம்.பி., கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி...? அரசியல் களத்தில் அதிர்ச்சி
ஆனால் மீனவர்கள் இதற்கு ஒத்துழைக்காமல் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் அந்த பகுதிக்கு வந்தார் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கைது செய்த மீனவர் போஸ்கோவை உடனடியாக விடுவிக்க வேண்டும் மேலும் தங்கு கடல் செல்ல அனுமதி வழங்க வேண்டும் இல்லை என்றால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க மாட்டோம் என கூறினர் மேலும் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர் மேலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர் கீதா ஜீவன் மீனவர்களிடம் இது தேர்தல் நேரம் தேர்தல் முடிந்த பின்பு பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார் அதற்கு மீனவர்கள் தாங்கள் இந்த கோரிக்கையை 20 ஆண்டுகளாக வைத்து போராடி வருகிறோம் இல்லையென்றால் கடிதம் மூலம் எழுதிக் கொடுத்து எங்களுக்கு உறுதி அளிக்கிறீர்களா என கேட்டனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகளிடம் கேட்டு தங்களுக்கு பதில் கூறுவதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து அமைச்சர் கீதா ஜீவன் சென்று விட்டார் தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி விசைப்படகு துறைமுக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ