கோவையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா-விற்கு புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜெ., வைக்கப்பட்ட முதல் சிலை இது என்பது குறிப்பிடத்தக்கது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதை அடுத்து நிகழ்ச்சி திடலின் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு அருகிலேயே எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா-விற்கு புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது.


கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக வ.உ.சி மைதானம் அருகே உள்ள அண்ணா சிலையை செப்பனிடும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. 


இரும்பு தகரங்களால் மறைத்து சிலை பரமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வந்தது. இதனால் பராமரிப்புப் பணிகள் குறித்து வெளிப்படையாக ஏதும் தெரியவில்லை. 


இந்நிலையில், இன்று காலை சிலையை மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு தகரங்கள் அகற்றப்பட்டன. 


தகரங்கள் அகற்றப்பட்ட பின்னர் அங்கிருந்த அண்ணா சிலைக்கு அடுத்து எம்.ஜி.ஆர்-க்கும் அதற்கு அடுத்ததாக ஜெயலலிதாவுக்கும் சிலை அமைக்கப்பட்டிருந்தது. 


இச்சம்பவம் குறித்து அதிமுக தொண்டர்களிடையே பெரும் இன்ப அதிர்ச்சி நிலவி வருகின்றது.



தமிழ்நாட்டிலேயே ஜெ.,-க்கு வைக்கப்பட்ட முதல் சிலை இது. மேலும மூன்று முன்னாள் முதல்வர்களுக்கு ஒரே பீடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சிலை போன்ற பெருமைகளை இந்த சிலை பெற்றுள்ளது!