திண்டிவனம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த போலி சாமியார் உட்பட 3 பேரை 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த 13 ஆம் தேதி வீட்டில் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார்.
 அப்போது கீழ் ஆதனூர் என்ற இடத்தில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை நிறுத்தி சிறுமியை கட்டாயப்படுத்தி ஆட்டோவில் ஏற்றி உள்ளார். 


அப்போது சிறுமி திண்டிவனம் செல்வதாக கூறி உள்ளார். திண்டிவனத்தில் விடுகிறேன் என ஆட்டோ ஓட்டுனர் சிறுமியை  ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மதுராந்தகம் அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையில் சிறுமியை காணவில்லை என திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். 


புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் (TN Police) சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். இதனிடையே போலீசாருக்கு சிறுமியின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. 


ALSO READ | கட்டப்பஞ்சாயத்து: ’என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ தலைமையில் சிறப்புப்படை


இந்நிலையில் செல்போனின் ஐஎம்இ எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் வேறு ஒரு நபர் பேசியது தெரியவந்தது. இதனையடுத்து அந்த எண்ணை ஆய்வு செய்து செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர் கிராமத்தில் சிறுமி இருப்பதையும், அவரை மூன்று பேர் அடைத்து வைத்திருப்பதையும் கண்டறிந்தனர். 


சிறுமியை மீட்ட போலீசார் மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் திருக்கழுக்குன்றத்தை அடுத்த எடையாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவன் மகன் எல்லப்பன்(39), என்பவர் கடந்த 13ம் தேதி சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்றது தெரியவந்தது. 


மேலும் விசாரணையில் எல்லப்பன் சிறுமியை கடத்தி சென்று மதுராந்தகம் அடுத்த சிறுபேர்பாண்டி கிராமத்தில் மணி மகன் பிரபு என்கின்ற அப்பு(33) என்பவர் வீட்டில் அடைத்து வைத்ததும், போலீசார் தேடுவதை அறிந்து செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் புவனேஸ்வரி நகரில் அண்ணன் மகன் சின்னப்பையன்(53), என்பவரது ஆட்டுக் கொட்டகையில்  அடைத்து வைத்து பாலியல் சீண்டலில் (Sexual Assault) ஈடுபட்டதும் தெரியவந்தது.



இதனையடுத்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போலி சாமியார் எல்லப்பன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பிரபு, சின்னபையன் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


ALSO READ | சிறுவன் தலையை பதம் பார்த்த காவலர் துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வந்த குண்டு!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR