தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா... சுயக்கட்டுப்பாட்டை கோரும் தமிழக அரசு...
தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிடுகையில்., லண்டனில் இருந்து திரும்பிய இருவருக்கும், மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து திருப்திய ஒருவர் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர். 25 வயது நிறம்பிய அவர் தற்போது சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மற்றொருவர் திருப்பூரைச் சேர்ந்தவர் இவர் தற்போது ESI மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மதுரையை சேர்ந்த ஒருவருக்கு வெளியாடு பயணம் தொடர்பான தகவல்கள் இல்லை. மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த இவருக்கு 54 வயது ஆகிறது, தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் இதுவரை 12,519 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இவர்கள் உடல் நலம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரையில் தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9-னை எட்டியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவிற்கு மத்திய அரசு பிரிந்துறைத்துள்ளது. அந்த வகையில் தற்போது வரை நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஊரடங்கு உத்தரவினை அமுல் படுத்தியுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை நாளை (மார்ச் 24) மாலை 6 மணி துவங்கி மார்ச் 31-ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.