தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: தேர்தல் அன்று மழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம்
நாளை மறுநாள் முதல் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
சென்னை: தமிழகத்தில் சில நாட்களாகவே கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் வழக்கத்தை விட 2-4 டிகிரி செல்சியஸ் வரை பல மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருந்ததால், தேர்தல் பிரசாரம் கூட காலை மற்றும் மாலை வேலைகளில் வைத்துக்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவிறுத்தி இருந்தது.
இந்தநிலையில், இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் "நாளை மறுநாள் முதல் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் இருக்கும். அதிகமாகவோ அல்லது குறைவான அளவிலோ இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது. அதேவேளையில் தென்மேற்கு பருவமழை 96 சதவீதம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை பார்க்கையில், தேர்தல் அன்று தமிழகத்தில் மழை பெய்வதற்க்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.