வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளனர்.


 இந்நிலையில், கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணி முதல் பல்வேறு இடங்களில், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணிவரை கரூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீ.,) கரூர், 16, அணைப்பாளையம், 12.3, க.பரமத்தி, 13.6, குளித்தலை, 25, தோகைமலை, 15, கிருஷ்ணராயபுரம், 37, மாயனூர், 55, பஞ்சப்பட்டி, 37.8, கடவூர், 70.2, மயிலம்பட்டி, 83 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. சராசரியாக, 40.93 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. 


கரூர் மாவட்டத்தில், மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ள பஞ்சப்பட்டி, கடவூர், பாலவிடுதி மற்றும் மயிலம்பட்டியில் அதிகளவில் மழை பெய்துள்ளதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதை தொடர்ந்து, வங்க கடலில் உருவான அம்பன் புயல், அதிதீவிர புயலாக மாறி, மேற்கு வங்க கடற்கரையில் இருந்து 630 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த புயல் 6 மணிநேரத்தில் 16 கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்கிறது. 


மேலும், இது அதே திசையில் நகர்ந்து, நாளை மாலை வங்கதேசம்-மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்று கூறியுள்ளார். அம்பன் புயலால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.