Tamil Nadu Crime Latest News Updates: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 29 வயதான இவர் மாட்டு தீவன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். ரவிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மெட்ரிமோனி செயலி ஒன்று மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சந்தியா என்கின்ற சத்யா (30) என்பவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், செல்போன் எண்களையும் பரிமாறி உள்ளனர். நாளடைவில் பல மாதங்கள் தொடர்ந்து இவர்கள் பேசியதால் இருவரும் காதலித்துள்ளனர். இதற்கிடையே சத்யாவின் உறவினர் என தமிழ்ச்செல்வி என்பவரும் அறிமுகமாகி உள்ளார். இதன் பின்னர் மகேஷ் அரவிந்த் மற்றும் சத்யா ஆகியோர் சந்தித்து வந்துள்ளனர். 


பல பேருடன் தொடர்பா...?


இதற்கிடையே தமிழ்செல்வி மற்றும் சத்யா இருவரும் சேர்ந்து அடிக்கடி ரவியிடம் பல்வேறு காரணங்களை கூறி பணம் பெற்று வந்துள்ளனர். அவரும் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி, தொப்பம்பட்டியில் இருவருக்கும் தமிழ்ச்செல்வி திருமணம் செய்து வைத்துள்ளார்.


இதன் பின்னர் ரவி, சத்யாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரது உறவினர்கள் தாலிக்கொடி உள்பட 12 பவுன் நகை சத்யாவுக்கு எடுத்து கொடுத்துள்ளனர். இதன்பின்னர் சத்யா அடிக்கடி பல ஆண்களுடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் ரவி அவரது செல்போனை பார்த்தபோது அதில் ஆண்கள் சிலருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பார்த்துள்ளார். இது குறித்து கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 


மேலும் படிக்க | என்கவுண்டர் பயம்.. பாதுகாப்பு கேட்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி பொன்னை பாலு


வைரலான சத்யா


இதனால் சத்யா திடீரென வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரவி இதுகுறித்து  தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் சத்யா தன்னை திருமணம் செய்து ரூ.50 ஆயிரம் மற்றும் 12 பவுன் நகைகளை மோசடி செய்ததாகவும், பலபேரை இதுபோல் ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். 


இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் 1 தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதற்கிடையே சத்யா பலரை திருமணம் செய்து ஏமாற்றியதாக அவரது புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. 


கண்ணீர்விட்டு கதறிய சத்யா


தனிப்படை போலீசார் புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யாவை நேற்று முன்தினம் நள்ளிரவு (ஜூலை 14) பிடித்து தாராபுரம் அழைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை 14) மதியம் சத்யா கைது செய்யப்பட்டார். சத்யா 5க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து மோசடி செய்ததாக பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் கைது செய்து தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.  நீண்ட நாட்களாக தேடி வந்த சத்யா போலீசார் கைது செய்தனர்.


கைது செய்து சத்யாவை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றபோது ஊடகத்தை நோக்கி சத்யா பேசுகையில்,"நான் வெளியே வந்து, அனைத்து ஆதாரங்களையும் காண்பித்து, உங்களுக்கு விளக்கம் கொடுக்கிறேன். தயவுசெய்து எனது குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டாம், என்னை மிகவும் கலங்கப்படுத்திவிட்டீர்கள், எனது தாயார் தற்கொலை செய்துகொண்டார் என்ற அளவிற்கு பேசியுள்ளீர்கள், இதற்கு மேல் என்னை யாரும் அசிங்கப்படுத்த முடியாது. காசியிருப்பவர்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை எல்லோரும் காண்பித்துவிட்டீர்கள்" என்று கண்ணீர்விட்டு அழுதார்.  


மேலும் படிக்க | உண்மை கொலையாளிகள் யார்? புதிய சிசிடிவி காட்சி வெளியானது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ