திருவண்ணாமலை: கொடியேற்றத்துடன் தொடங்கியது திருக்கார்த்திகை தீபத்திருவிழா
இன்று காலை 6.40 மணிக்கு விருச்சிக லக்கனத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட கோவிலில் உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை திருத்தலம். இங்கு உள்ள புகழ் மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
திருவண்ணாமலையில் (Tiruvannamalai) ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம், இன்று, அதாவது 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி அதிகாலையில் அண்ணாமலையார் திருக்கோயிலின் கருவறையின் முன்பாக பரணி தீபமும், மாலை ஆறுமணிக்கு கோயிலின் பின் புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் மாகதீபமும் ஏற்றப்படும்.
திருக்கார்த்திகை (Thirukarthigai) தீபத்திருவிழா கொடியேற்றத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருளினர்.
இன்று காலை 6.40 மணிக்கு விருச்சிக லக்கனத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட கோவிலில் உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இந்த கொடியேற்ற விழாவில் தமிழக துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதனை தொடந்து 10 நாட்கள் காலை மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகளின் உற்சவம் திருக்கோயிலின் உள்ளே உள்ள 5ஆம் பிரகாரத்தில் நடைபெறும். வரும் 19ஆம் தேதி அதிகாலையில் அண்ணாமலையார் கோயிலின் கருவரையின் முன்பாக பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
கொரோன (Coronavirus) பரவல் காரணமாக மாடவீதிகளில் பஞ்சமூர்த்திகளின் வீதியுலா தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக ரத்து செய்யப்பட்டு திருக்கோயிலின் உள்ளே 5ஆம் பிரகாரத்தில் பக்தர்கள் இன்று நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது.
ALSO READ: திருவண்ணாமலையில் கிரிவலம்: தொடர்ந்து 19வது மாதமாக நீடிக்கும்தடை!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR