பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

 

பிளஸ் 2 தேர்வு முடிவில் கணிதப் பாடத்தில் அதிக அளவில் 3,656 மாணவ-மாணவிகள் 200-200 பெற்று அசத்தியுள்ளனர். கணக்கு பதிவியல் பாடத்தில் 5597 பேர் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

 

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் முதல் முறையாக கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. 

 

கிரேட் விபரம் :- 

 

> ஏ கிரேடு : 1180 மார்க்குகளுக்கு மேல் பெற்றவர்கள் - 1171

 

> பி கிரேடு : 1151 - 1180 மார்க் பெற்றவர்கள் - 12,283

 

> சி கிரேடு : 1126 - 1150 மார்க் பெற்றவர்கள் - 14,806

 

> டி கிரேடு : 1101 - 1125 மார்க் பெற்றவர்கள் - 17,750

 

> இ கிரேடு : 1001 - 1100 மார்க் பெற்றவர்கள் - 95,906

 

> எப் கிரேடு : 901 - 1000 மார்க் பெற்றவர்கள் - 1,36,849

 

> ஜி கிரேடு : 801 - 900 மார்க் பெற்றவர்கள் - 1,64,489

 

> எச் கிரேடு : 701 - 800 மார்க் பெற்றவர்கள் - 1,69,070

 

> ஐ கிரேடு : 700 மற்றும் அதற்கு கீழ் பெற்றவர்கள் - 2,80,938