தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை கோட்டூர் புறத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பிளஸ் 2வில் பெரம்பலூர் மாவட்டம் 97.95 சதவீதம் என அதிக தேர்ச்சி விகிதத்தை பெற்று முதலிடத்தை பெற்றது. இதில் வேலூர் மாவட்டம் (86.69 சதவீதம்) கடைசி இடத்தில் உள்ளது.


மேலும் படிக்க | 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... எழுதாதவர்கள் எத்தனை பேர் தெரியுமா?


10 ஆம் வகுப்பு தேர்ச்சி விவரம்
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர் எழுதினர், அதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேர், மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் , இவர்களின் தேர்ச்சி சதவீதம் (90.07%)ஆகும். மாணவியர் 4,27,073 (94.38%) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,94,920 (85.83%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக 100 மதிப்பெண் பெற்றவர்களின் விவரம்
தமிழ் 1 ( 94.84% தேர்ச்சி)
ஆங்கிலம் 45   (96.18% தேர்ச்சி)
கணிதம் 2186   (90.89% தேர்ச்சி)
அறிவியல் 3841  (93.67% தேர்ச்சி)
சமூக அறிவியல் 1009 (91.86 % தேர்ச்சி)


மாவட்ட வாரியாக அதிக  தேர்ச்சி விகிதம்
1.கன்னியாகுமரி 97.22 பெரம்பலூர் சதவீதம்
2.பெரம்பலூர் 97.15 சதவீதம்
3.விருது நகர்  95.96 சதவீதம்


குறைந்த தேர்ச்சி விகிதத்தை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 79.87 சாதவீதமே தேர்ச்சி உள்ளது.


12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விவரம்
தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8,06,277ஆகும் , அதில் மாணவியர்களின்  எண்ணிக்கை 4,21,622 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 3,84,655 ஆகும். தேர்ச்சி பெற்றவர்கள் 7,55,998 (93.76%) ஆகும். மாணவியர் 4,06,105 (96.32%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,49,893 (90.96%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மேலும் படிக்க | நாளை நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு குறித்த முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR