தமிழக சட்ட மன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. கிட்ட தட்ட அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. பாஜகவின் வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தேர்வில், கட்சியின் விசுவாசிகளுக்கு வாய்ப்பளிக்காமல், பணம் உள்ளவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படுவதாக, காங்கிரஸ் எம் பி ஜோதி மணி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | வெளியானது திமுகவின் தேர்தல் அறிக்கை; இந்து ஆலயங்கள் புனரமைக்க ₹1000 கோடி

விருது நகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இதற்கு பதிலடி தரும் வகையில்,  அன்னை சோனியா காந்தி தலைமையில் கட்சி நியாயமான முடிவை எடுத்து வருகின்றனர். சுய விளம்பரத்திற்காக கட்சிக்கு அவப்பெயரை தேடி தருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கூறியுள்ளார். 
 


காங்கிரஸ் கட்சித் தலைவர் கோபண்ணாவும் ஜோதிமணிக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2016 கரூர் சட்டமன்றத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த  பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சண்டித்தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாக கூறுவுது ஒரு அரசியல் மோசடி என பதிவிட்டுள்ளார்



தேர்தலுக்கு முன்னால் வலுக்கும் கோஷ்டி பூசல் கட்சிக்கு பின்னடைவை கொடுக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


ALSO READ | தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுகவின் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR