Tamil Nadu Assembly Election 2021: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து கட்சிகளும் ஓரளவுக்கு தங்கள் கூட்டணிகளை முடிவு செய்துவிட்டதோடு, வேட்பாளர் பட்டியல்களையும் வெளியிட்டிக்கொண்டிருக்கின்றன. திராவிட முன்னேற்ற கழகம் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட வாய்ப்புள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பிடத்தக்க வகையில், திமுக (DMK) தனது கூட்டணி கட்சிகளுடன் தனது தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தங்களையும் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது. ஆளும் அதிமுக-வை தோற்கடித்து கோட்டையில் ஆட்சியைப் பிடிக்க, முழு முனைப்புடன் திமுக நடவடிக்கைகளை மெற்கொண்டு வருகிறது.


இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மறுமலார்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் மூன்று பிற கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை திமுக இறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதிமுக-வின் (MDMK) வேட்பாளர்கள் ஆறு தொகுதிகளில் திமுக-வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள். சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், மதுராந்தகம் மற்றும் அரியலூர் ஆகியவை இந்த இடங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 3 தொகுதிகளைப் பெற்றுள்ளது. கட்சி, கடையநல்லூர், வாணியம்பாடி மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் இருந்து போட்டியிடும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் மற்ற கூட்டணி கட்சியான ஆதி தமிழர் பேரவைக்கு அவினாஷி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக்கிற்கு உசிலம்பட்டி தொகுதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை கட்சிக்கு நிலக்கோட்டை தொகுதி வழங்கப்பட்டுள்ளது.


ALSO READ: TN Assembly Election: எந்தப் பக்கம் போகும் தேமுதிக? கூட்டணி குழப்பங்கள் முடியுமா?


காங்கிரஸ் (Congress)மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கான (சிபிஐ, சிபிஐ-எம்) தொகுதிகளையும் திமுக இறுதி செய்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, சிபிஐ-எம் க்கு திருப்பரங்குன்றம், திண்டுக்கல் மற்றும் கோவில்பட்டி ஆகிய தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளான கந்தர்வக்கோட்டை, ஹரூர் மற்றும் கீழ்வேலூர் ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.


தி.மு.க 2011 ல் இருந்து அதிகாரத்தில் அமர முடியாமல் உள்ளது. ஆகையால், இம்முறை ஆட்சியை பிடிக்க அனைத்து வித உத்திகளையும் கட்சி கையாண்டு வருகிறது.


ALSO READ: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுகவின் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR