தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. அரசியல் சூழல் பரபரப்பாக உள்ள நிலையில், ஒரு வினோதமான வாக்குச்சாவடியைப் பற்றி இங்கே பார்க்கலாம். 
தமிழக கர்நாடகா எல்லையில் உள்ள அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியை அடைவது தேர்தல் அதிகாரிகளுக்கு கடினமான பணியாக இருக்கக்கூடும். பார்கூர் பஞ்சாயத்தில் உள்ள குட்டையூரை அடைய அவர்கள் தமிழ்நாட்டில் சாலை வழியாக 54 கி.மீ பயணித்து பின்னர் கர்நாடகாவில் மேலும் 29 கி.மீ பயணிக்க வெண்டியிருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தியூரிலிருந்து 83 கி.மீ தூரத்தில் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்பு நடுநிலைப்பள்ளி, அந்த கிராமம் மற்றும் வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 489 வாக்காளர்களுக்கும் ஒரு வாக்குச் சாவடியாக செயல்படுகிறது.


இங்கு தேர்தல் (Election) பணிக்காக செல்லும் அதிகாரிகள் அந்தியூரிலிருந்து கர்நாடகாவின் சாம்ராஜநகர் மாவட்டத்தில்  கர்கேகண்டி வரை 54 கி.மீ தூரத்தை கடந்து, அங்கிருந்து 24 கி.மீ பயணித்து ஜல்லிபாளயம் வரை செல்ல வேண்டும். அவர்கள் எல்லையை அடைய ஐந்து கி.மீ பயணம் செய்ய வேண்டும். பின்னர் ஒரு ஓடையைக் கடந்து 750 மீட்டர் தூரம் நடந்து குட்டையூரை அடைய வேண்டும். "அந்தியூரிலிருந்து வாக்குச் சாவடிக்குச் செல்ல சுமார் மூன்று மணி நேரம் ஆகும்" என்று சமீபத்தில் குட்டையூருக்குச் சென்ற ஒரு தேர்தல் அதிகாரி கூறுகிறார்.


ALSO READ: TN Elections 2021: இன்று வேட்பு மனு தாக்கல் நிறைவு; 5000+ வேட்பு மனுக்கள் தாக்கல்


வாக்குப்பதிவுக்குப் பிறகு, 47 கி.மீ தூரத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வாக்கெண்ணிக்கை மையத்திற்கு தேர்தல் பொருட்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.மினி லாரி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் என்றும்,  கிராமத்திற்குள் மொபைல் போன் (Mobile Phone) இணைப்பு இல்லாததால், வன மற்றும் காவல் துறைகளின் டிரான்ஸ்ஸீவர்கள் தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்படும் என்றும் அந்த அதிகாரி கூறுகிறார்.


450 மக்கள் தொகை கொண்ட இந்த கிராமம் கடம்பூர் மலையிலிருந்து 27 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மக்கம்பாளையத்திலிருந்து ஐந்து கி.மீ வனப்பாதை வழியாகவும் இதை அடையலாம். ஆனால் கற்பாறைகள் மற்றும் நான்கு நீரோடைகள் மின்னணு வாக்கு இயந்திரங்கள (EVM) மற்றும் வி.வி.பி.ஏ.டி.க்களை சேதப்படுத்தக்கூடும் என்று அதிகாரி கூறுகிறார்.


இந்த கிராமத்து மக்களுக்கு போக்குவரத்து ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. பிக்-அப் வாகனத்தை நம்பித்தான் அவர்கள் இருக்கிறார்கள். பிக்-அப் வாகனங்கள் மூலம் மக்கம்பாளையத்தை அடைந்து பின்னர் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் அந்தியூரில் உள்ள அரசு அலுவலகங்களை அவர்கள் அடைய வேண்டும். மளிகை சாமான்கள் மற்றும் பிற பொருட்களை வாங்கவும், மருத்துவம்னைகளுக்கு செல்லவும் மக்கள் ஜல்லிபாளையத்திற்குச் செல்கிறார்கள். எந்த ஒரு முக்கியமான இடத்திற்கும் சரியான, பாதுகாப்பான அணுகல் இல்லாததால், இந்த கிராமத்து குழந்தைகள் படிப்பை விட்டு விட்டு, குழந்தை தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.


ALSO READ: தாராபுரத்தை மேம்படுத்துவதே எனது குறிக்கோள்: பாஜக வேட்பாளர் எல்.முருகன்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR