திருமணமாகும் ஏழை பெண்களுக்கு ‘தாலிக்கு தங்கம்’ உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார் நிதி அமைச்சர் ஜெயக்குமார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- 


2021-ம் ஆண்டு தான் தமிழகத்திற்கு தேர்தல் வரும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். அந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சிதான் அமையும். தமிழகத்திற்கு விரைவில் தேர்தல் வரும் என்று பன்னீர் செல்வம் தெரிவிப்பது அதிமுக தொண்டர்களின் எண்ணத்திற்கு எதிரானது என்றார். அதே சமயம் அந்த கருத்து விஷமத்தனமானது என்றும் ஜெயக்குமார் கூறினார்.


பதவியில் இருந்த போதே ஜெயலலிதா மரணம் குறித்து பன்னீர்செல்வம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.