தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சி முன்பு எப்போதும் இல்லாத வகையில், களத்தில் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் பாஜகவின் மாநில தலைவரும் ஆன எல்.முருகன் (Dr.L.Murugan), அரவக்குறிச்சி தொகுதியில் தமிழக பாஜகவின் துணைத் தலைவர் திரு.கே.அண்ணாமலை,  சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திருமதி.குஷ்பூ சுந்தர் ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.


அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது நடத்திய ஊர்வலத்தில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு மிகுந்த உற்சாகம் அளித்தனர். 


இந்நிலையில், நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்ள, பிரதமர் நரேந்திர மோடி, உத்திர பிரதேச முதலவர் திரு.யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் உட்பட பல தலைவர்கள் வருகின்றனர்.


 



இது தவிர பாஜக புதுமையான முறையிலும் பிரச்சாரம் செய்து வருகிறது.  ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திருமதி.குஷ்பு அவர்களின் பெயர் பொறித்த ஸ்டிக்கரை வாட்டர் பாட்டிலில் ஒட்டி, விநியோகம் செய்யப்படுகிறது.  வாக்காளர்களை கவர, வாட்டர் பாட்டிலில் குஷ்பூவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கோரி, அதனை வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
கோடை காலம் என்பதால் இலவசமாக தரும் வாட்டர் பாட்டில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதால் இந்த புதிய யுக்தியை பாஜக கையில் எடுத்துள்ளது.


ALSO READ | தாராபுரத்தை மேம்படுத்துவதே எனது குறிக்கோள்: பாஜக வேட்பாளர் எல்.முருகன்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR