#துள்ளி_வருது_வேல்: துள்ளி வரும் வேலைக் கண்டு கழகங்கள் அஞ்சுவது ஏன்..!!!

தமிழகத்தில், பாஜக வேல் யாத்திரையை அனைத்து தடைகளையும் மீறி தொடங்கியது... வெற்றிவேல், வீரவேல் என்ற முழக்கத்துடன் திருத்தணிக்கு தொண்டர்களுடன் புறப்பட்டார் பாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன்...

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 9, 2020, 07:01 PM IST
  • தமிழகத்தில், பாஜக வேல் யாத்திரையை அனைத்து தடைகளையும் மீறி தொடங்கியது... வெற்றிவேல், வீரவேல் என்ற முழக்கத்துடன் திருத்தணிக்கு தொண்டர்களுடன் புறப்பட்டார் பாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன்...
  • பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும், கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சருமான சிடி ரவி வேல யாத்திரை தடையை உடைத்து தொடரும் என கவிதையாய் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.
#துள்ளி_வருது_வேல்: துள்ளி வரும் வேலைக் கண்டு கழகங்கள் அஞ்சுவது ஏன்..!!! title=

தமிழகத்தில், பாஜக வேல் யாத்திரையை அனைத்து தடைகளையும் மீறி தொடங்கியது... வெற்றிவேல், வீரவேல் என்ற முழக்கத்துடன் திருத்தணிக்கு தொண்டர்களுடன் புறப்பட்டார் பாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன்...

முன்னதாக, நேற்று கொரோனா (Corona) பரவலை காரணம் காட்டி வேல் யாத்திரைக்கு தடை விதித்தது அதிமுக அரசு. ஆனால், என்ன நடந்தாலும் வேல் யாத்திரை துள்ளி வரும்.. கடவுளுக்கோ தமிழுக்கோ தீங்கு என்றால், அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி படக் கூறினார். 

பாஜகவின் (BJP) தேசிய பொதுச் செயலாளரும், கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சருமான சிடி ரவி  வேல யாத்திரை தடையை உடைத்து தொடரும் என கவிதையாய் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.

தமிழில் எழுதப்பட்ட அந்த ட்வீட்ட்டின் அர்த்தத்தை ஆங்கிலம் மற்றும் கன்னடத்திலும் அவர் ட்வீட் செய்துள்ளார். 
திரிசூலம் கொண்டவளின் வீர மகனவன் 
வெற்றிவேலன் என்ற நம் தெய்வம் 
இவன் தாய்க்கு ஒரு சிக்கல் என்று தெரிந்தால் 
படை திரட்டி ஓடிவரும் சிங்காரவேலன் 
தன்மகன் போல் நம்முருகன் என்று - தமிழ்ப்பெண்கள் வேல் யாத்திரை சென்றிட கூடுவரே இன்று

- என கவிதையாய் ட்விட் செய்துள்ளார். 

தமிழகத்தை (Tamilnadu) பொறுத்தவரை எதிர்ப்பு அரசியலுக்கு என்றுமே நல்ல இடம் உண்டு. அதைத் தான் இரு கழகங்களுக்கு செய்து வந்தன. ஒன்றை விட்டால் இன்னொன்று என மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த இரு கழகங்களுக்குமே மூன்றாவதாக ஒரு கட்சி வலுப்பெறுவதில், உடன்பாடில்லை. அதனால், அவர்கள் என்றுமே பாஜக வளர இடம் கொடுக்க விரும்புவதில்லை. 

ALSO READ | சட்டம் தன் கடமையை செய்யும்! வேல் யாத்திரையை கைவிடுவதே பாஜகவுக்கு நல்லது -அமைச்சர் ஜெயக்குமார்

சில மாதங்களுக்கு முன் எழுந்த கருப்பர் கூட்டம் சர்ச்சையின், கந்தர் சஷ்டி கவசத்தை இழிவு படுத்தி பேசியதில், தமிழக்கத்தின் மூலை முடுக்கில் இருந்தும் குரல்கள் எழும்பின. இதை வரை இல்லாத அளவில் எழுச்சி காணப்பட்டது. 

சிறுபான்மையினர் ஓட்டுகளை கவர, திமுக எப்போதுமே இந்துக்களை இகழ்ந்து பேசி, தன்னை இந்து விரோதி என்பதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளும். 

ரம்ஜானுக்கும் கிரிஸ்துமஸ் பண்டிகைக்கும் வாழ்த்து சொல்ல தவறாத திமுகவிற்கு, இந்து பண்டிகைகள் என்பது எப்போதும் விடுமுறை நாட்கள் தான். 

பிரிவினையை ஆதரிக்கும் திமுகவிற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத சொல், தேசியம் மற்றும் தெய்வீகம். ஆனால், சமீபத்தில், வாக்கு அரசியலுக்காக, தனக்கு கொஞ்சமும் சம்பந்த இல்லாத கொள்கையான தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி அன்று, அங்கு அஞ்சலி செலுத்த போய், விபூதியை  கீழே கொட்டி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதோடு இல்லாமல், இந்து பெண்களை இழிவாக பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டிக்காமல் ஆதரவாக பேசி, தான் இந்து விரோதி தான் என்பதை திமுக மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தியுள்ளது.

ALSO READ | தமிழகத்தில் தொடரும் பாஜக அதிரடிகள்... தாமரை மலர்ந்தே தீருமா..!!!

இந்நிலையில், இந்த வேல் யாத்திரை(Vel Yatra), இந்து வாக்குகளை ஒன்றிணைத்து விடும் என இரு கழகங்களுமே அஞ்சுகின்றன. இந்து மதத்தை இழிவுபடுத்தி, இந்து உணர்வுகள் தொடர்ந்து தூண்டப்படுகின்றன. அதனால், வேல யாத்திரையை நடக்க விடாமல்  செய்ய வேண்டும் என்பது தான் திமுக, அதிகமுக ஆகிய இரு கட்சிகளின் எண்ணமாக உள்ளது. 

மூன்றாவது ஒரு கட்சி உருவெடுத்தால், மேற்கு வங்காளம் போல், கம்யூனிஸ்ட் கட்சியை காலி செய்து விட்டு, இரண்டாம் இடம், என முன்னேறி, இப்போது மம்தா வின் ஆட்சியை வீழ்த்தும் அளவிற்கு பாஜக வலுவடைந்துள்ளதை போல், தமிழகத்தில் ஏற்படக் கூடாது என கழகங்கள் அஞ்சுகின்றன.

ஏனென்றால், முன்பெல்லாம், திமுக, அதிகமுக தவிர வேறு கட்சிக் கொடிகளை தமிழகத்தில் எங்கும் காண முடியாது. இப்போது மூலை முடுக்கில் எல்லாம் பறக்கிறது பாஜகவின் கொடி. முருகனின் வேலையை ஏந்திய பாஜக தலைவர் முருகன், துணை தலைவர் அண்ணாமலை என இருவரும் களத்தில் மிக அருமையாக தன்ன்னை நோக்கி வீசும் பந்துகளை குறி பார்த்து அடிக்கின்றனர்.

சூரபத்மனை அழித்த வேல், தமிழகத்தில் உள்ள பிரிவினைவாத, இந்து விரோத சக்திகளை வீழ்த்தி பாஜகவிற்கு வெற்றியை தேடித்தருமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

#வெற்றிவேல்_யாத்திரை 
#தடை_அதை_உடை 
#துள்ளி_வருது_வேல்

ALSO READ | தேர்தலுக்காக திமுக கையில் எடுக்கும் இந்தி எதிர்ப்பு உத்தி... கை கொடுக்குமா... காலை வாருமா...!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News