சென்னை: ‘நீட்’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக ‘நீட்’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் நடவடிக்கை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.


மருத்துவ படிப்பில் பழைய முறையை பின்பற்ற வகை செய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.


நீட் தேர்வின்றி மருத்துவ படிப்பில் பழைய முறையை பின்பற்ற மசோதா தாக்கல்.


தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும் அதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் வலியுறுத்தி இருந்தார். 


இந்நிலையில், நீட் தேர்வின்றி 12-ம் வகுப்பு கட்ஆஃப் மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு.