தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்த உரை சர்ச்சைக்குள்ளானது. அரசு கொடுத்த உரையில் சில வார்த்தைகளை விட்டும், சில வார்த்தைகளையும் அவர் சேர்த்தும் படித்தது ஆளும் கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரவையில் ஆளுநர் இருக்கும்போதே அவர் வாசித்த உரைக்கு பதிலாக அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏறும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு ஒப்புதல் கொடுத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ’ஆளுநரே வெளியேறு’ ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து போராட்டம் அறிவிப்பு


இதனால், கடும் கோபமான ஆளுநர் ஆர்.என்.ரவிதேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். ஆளுநரின் இத்தகைய நடவடிக்கை குறித்து சபாநாயகர் அப்பாவு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து பேசும்போது, " பொது மேடையில் பேசுவது போல் சட்டமன்றத்தில்  ஆளுநர் பேசுவது நியாயம் இல்லை. தமிழக அரசின் உரையைத்தான் வாசிக்க வேண்டும்.  அதில் ஏதாவது கருத்து வேற்றுமை இருந்தால் அரசிடம்தான் சொல்லி அதை முன்னமே மாற்றம் செய்திருக்க வேண்டும். 



பிரதமர் நரேந்திர மோடி எழுதிக் கொடுக்கும் உரையைத்தான் குடியரசுத் தலைவர் வாசிப்பார். மோடி தலைமையிலான  அரசால் கொண்டுவரப்படும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரால் உடனடியாக ஒப்புதல் தரப்படுகிறது.  பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்பட்ட நபர்களுக்கு உயர் பதவி கிடைத்திருக்கிறது. அப்படி உயர் பதவி கிடைக்கும் நோக்கில் மத்திய அரசை  திருப்தி படுத்த தமிழக ஆளுநர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் உள்ளது. 


 அம்பேத்கர் பெயரையே அவர் உச்சரிக்க மறுத்திருப்பது வேதனை அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் தேசிய கீதத்திற்கு முன்னதாக ஆளுநர் பேரவையிலிருந்து அவர் வெளியேறியிருப்பது  நாட்டையே அவமதிப்பதாகும். முதலமைச்சர் கண்ணியமான முறையிலேயே பேசினார். உரைக் குறிப்பில் இல்லாததை ஆளுநர்  பேசியதாலேதான் முதலமைச்சர் அதற்கு பதில் அளிக்க வேண்டியது இருந்தது. ஆளுநர்  பேசியதற்கு வருத்தம் மட்டுமே முதல்வர் தெரிவித்தார்.  ஆளுநர் சபை மரபை மீறியிருந்தாலும் ஆளுநர்  உரையின் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெறும்" என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | TN Governor Skips: ஆளுநர் தவிர்த்த முக்கிய வார்த்தைகள் என்னென்ன? - முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ