பாஜக கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (Ramnath Kovind) அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்ட இல.கணேசனுக்கு (La. Ganesan) தமிழக பாஜக தலைவர். கே.அண்ணாமலை (K.Annamalai) தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த செய்தியை கேட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும், சிறந்த தேசியவாதியும் ஆன்மீக வாதியும் ஆன கணேசன் ஐயா அவர்களுக்கு இப்பதவி வழங்கப்பட்டிருப்பது 8 கோடி தமிழர்களுக்கும் வழங்கப்பட்ட அங்கீகாரமாக தான் கருதுவதாகவும். அண்ணாமலை கூறியுள்ளார். அவரது பணி சிறக்கவும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். 


மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த இல.கணேசன், வட கிழக்கு மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பினை அளித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும், பிரதமர்ன் நரேந்திர மோடிக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். மணிப்பூர் ஆளுநராக பணியாற்றப்போவது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


ALSO READ | ட்விட்டரில் கோரிக்கை: இரவோடு இரவாக உதவி செய்த தமிழிசை சௌந்தரராஜன்


தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த 76 வயதான இல கணேசன் தமிழக பாஜகவின் தலைவராகவும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக, சிக்கிம் (Sikkim) ஆளுநர் கங்காதர பிரசாத் மணிப்பூர் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் அவர்கள் தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுநராக பணியாற்றி வருகிறார்.


மேலும், சில நாட்களுக்கு முன் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாகக்கத்தின் போது, பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் அவர்களுக்கு மத்திய அரசு, மத்திய இணையமைச்சராக நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதை அடுத்து, திரு.அண்ணாமலை அவர்கள் பாஜக தலைவராக தற்போது பதவியில் உள்ளார். இந்நிலையில், தற்போது இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ALSO READ | தமிழகத்தில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு: எதற்கெல்லாம் அனுமதி?


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR