ஆட்டுமந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தைவிட பலமானதா? - தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம்தேட்டி வருகின்றது. இதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை அமைத்து வருகின்றன. குறிப்பாக பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைப்பாளர் போல செயல்பட்டு, எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து வருகிறார். 


இந்நிலையில், அண்மையில் சந்திரபாபு நாயுடு சென்னை வந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்தார். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், "ஆட்டுமந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தைவிட பலமானதா?" என விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். 



சமீபத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பியபோது, பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால், அதில் யார் பலசாளி? அந்த ஒருவர் தானே! என அவர் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது!