புது டெல்லி: மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் புதிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்தினார். இந்த கலந்துரையாடல் பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் அமைச்சர்கள் மட்டும் தான் பங்கேற்பார்கள். அந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கலந்து கொண்டடார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் எல். முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று செய்திகள் வெளிவருகின்றன.


முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான அமைச்சரவை (Cabinet Expansion) விரிவாக்கம் தொடர்பான ஆலோசனை தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு நடைபெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இன்று மாலை 6 மணிக்கு புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.


புதன்கிழமை மாலை பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மறுசீரமைப்பிற்கு முன்னதாக, இதுவரை குறைந்தது பன்னிரண்டு அமைச்சர்கள் அமைச்சர்கள் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். அதில் முக்கியமாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஆகியோர் அடங்குவர்.


சந்தோஷ் கங்வார், பாபுல் சுப்ரியோ, டெபஸ்ரீ சவுதுரி, ரத்தன் லால் கட்டாரியா, சஞ்சய் தோத்ரே, தவார்சந்த் கெஹ்லோட், பிரதாப் சந்திர சாரங்கி (மோஸ்) மற்றும் அஸ்வினி சவுபே (மோஸ்) உள்ளிட்ட பல அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.


இதற்கிடையில், பிரதமர் மோடி புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் மந்திரி அமைச்சர்களை சந்தித்தார். மோடியை சந்தித்தவர்களில் பாஜகவின் நாராயண் ரானே, சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்யா சிந்தியா, அஜய் பட், பூபேந்தர் யாதவ், ஷோபா கரண்ட்லேஜே, சுனிதா துக்கல், மீனாட்சி லேக்கி, பாரதி பவார், சாந்தனு தாகூர், கபில் பாசுப் மற்றும் அப்னா தளத்தின் அனுப்ரியா படேல் மற்றும் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அடங்குவார்கள்.


பிரதமர் நரேந்திர மோடி 2019 மே மாதம் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர்கள் குழுவில் இது முதல் மறுசீரமைப்பு ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR