தமிழகத்தில் வரவிருக்கும் 13 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 5 ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வரி வருவாய் வளர்ச்சி 4.4% கீழ் நோக்கி சென்றுள்ளது. தமிழகத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது என பல்வேறு விஷயங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. 


அதில், உள்ளாட்சி அமைப்புகள் மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்கள் 1,743 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஒரு நாள் வட்டியாக 87.31 கோடி ரூபாயை செலுத்துகிறது. 1200 கோடி ரூபாய் மின்வாரியம் மாநகராட்சிகளுக்கு செலுத்தாமல் உள்ளது போன்ற விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. போக்குவரத்து சந்தித்து வரும் பெரும் நஷ்டம் குறித்தும் வெள்லை அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: முக்கிய அம்சங்கள் இதோ


தமிழகத்தின் வெள்ளை அறிக்கை, திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்த்துகிறதோ என்பதோடு,  கட்டணயேற்றம் , விலையேற்றம் , வரியேற்றம் , போன்றவற்றை செயல்படுத்துவதற்கான அடித்தளமாக அமையுமோ என்று அனைத்து தரப்பு மக்களிடமும் சந்தேகம் எழுந்துள்ளது என்பதையும் மறுக்க இயலாது. 


இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் கே.அண்ணாமலை, தமிழகத்தின் நிதி நிலையையும் நிதி சுமையையும் சமாளிக்க இந்த வெள்ளை அறிக்கை மட்டும் போதாது வெளிப்படையான சீர்திருத்தங்கள் வேண்டும் என்றார்.


புதிய ஆட்சி, முந்தைய ஆட்சிகளையும், அரசுகளையும் குறை சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், இருட்டை இகழ்வதை விட வெளிச்சத்தை தூண்டுவதே நல்லது என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்ப மக்கள் கவலைகளையும், ஏக்கங்களையும் தீர்க்க வேண்டும் மக்கள் சுமைகளைக் குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.