ஊழல் களவாணிகளே! இதுதான் PMO நடைமுறை! ஆக!ஆகா?ஆக!: தமிழிசை சவுந்தராஜன்
கஜா புயலின் போது மத்திய அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறியவர்களுக்கு பதிலடி தரும் வகையில் கருத்து பதிவிட்ட தமிழக பாஜக தலைவர்.
நியூ டெல்லி: கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தில் 8 மாவட்டங்களை கடுமையாக தாக்கியது. கஜா புயல் காரணமாக தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்தது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டது. புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதி கேட்டு பிரதமரிடம் கோரிக்கை வைத்தது தமிழக அரசு. மேலும் இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு 1,500 கோடி ரூபாய் கேட்டிருந்தது.
இதனையடுத்து, தமிழகத்துக்கு ரூ.1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இதனால் சீரமைப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டமும் நடத்தினார்கள் குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்கட்சிகள் தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கவில்லை என்றும், பிரதமர் நேரில் வந்து பார்க்கவில்லை என்றும் மோடி அரசாங்கம் மீது குற்றம்சாட்டினர்.
தற்போது, ஃபானி புயல் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகம் முன் உதவித்தொகையாக தமிழகத்திற்கு ரூ.309.75 கோடியும் ஒடிசாவுக்கு ரூ.340 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.. 200.25 கோடியும், மேற்கு வங்கத்திற்கு 235.50 கோடியும் வழங்கி உள்ளது.
மேலும் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை போனில் தொடர்புக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, புயலின் சேதங்கள் குறித்தும், மீட்பு பணி குறித்தும் கேட்டறிந்தார். மத்திய அரசு சார்பாக மாநில அரசுக்கு அனைத்து விதமான உதவி மற்றும் ஆதரவையும் வழங்குவதாக முதல்வர் பட்நாயக்கிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
இதனை மேற்கொள்ள காட்டி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், தனது ட்விட்டர் பக்கத்தில், கஜா புயலின் போது மத்திய அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறியவர்களுக்கு பதிலடி தரும் வகையிலும், திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாகவும் கருத்து பதிவிட்டுள்ளார்.