+2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது
> பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (மே 12-ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
> முதல் முறையாக பிளஸ் 2 தேர்வு முடிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
> விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு இன்று (மே 12-ம் தேதி) முதல் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
> www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
> +2 தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மற்றும் தேர்வு எழுதாதவர்கள் துணைத்தேர்வில் பங்கேற்கலாம்.
> +2 தேர்வு சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும்.
12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பிளஸ்–2 தேர்வு முடிவுகளை வெளியிடும் முறையில் இந்த ஆண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, இதுவரை மாணவர்களின் ‘‘ரேங்க்’’ பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், மாநில அளவில் முதல் இடம் பெற்றவர்கள், இரண்டாம் இடம் பெற்றவர்கள், மூன்றாம் இடம் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும். மேலும் பாட வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்றவர்களின் பெயர் விவரங்களும் அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படமாட்டாது.(சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இதே முறை தான் பின்பற்றப்படுகிறது.)