பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிளஸ் 2 தேர்வு முடிவில் கணிதப் பாடத்தில் அதிக அளவில் 3,656 மாணவ-மாணவிகள் 200-200 பெற்று அசத்தியுள்ளனர். கணக்கு பதிவியல் பாடத்தில் 5597 பேர் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.


தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் முதல் முறையாக கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. 


மேலும் மாணவர்களை விட 5.2 சதவிகித மாணவிகள் தேர்ச்சிபெற்றுள்ளனர். 94.5 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 89.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தேர்ச்சி விகிதத்தில், தமிழகத்தில் விருதுநகர் முதல் இடம் பிடித்துள்ளது. கடலூர் கடைசி இடம் பிடித்துள்ளது. 


மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விவரம்:


1. கன்னியாகுமரி- 95.75
2. திருநெல்வேலி- 96.08
3. தூத்துக்குடி- 96.44
4. ராமநாதபுரம்- 96.77
5. சிவகங்கை- 96.18
6. விருதுநகர்- 97.85
7. தேனி- 95.93
8. மதுரை- 93.61
9. திண்டுக்கல் - 92.80
10. ஊட்டி- 92.06
11. திருப்பூர்- 96.05
12. கோவை- 95.83
13. ஈரோடு- 96.69
14. சேலம் - 92.89
15. நாமக்கல்- 96.40
16. கிருஷ்ணகிரி- 88.02
17. தருமபுரி- 92.23
18. புதுக்கோட்டை- 92.16
19. கரூர்- 94.96
20. அரியலூர்- 88.48
21. பெரம்பலூர்- 93.54
22. திருச்சி- 95.50 
23. நாகை- 88.08
24. திருவாரூர்- 88.77
25. தஞ்சாவூர்- 92.47
26. விழுப்புரம்- 86.36
27. கடலூர்- 84.86
28. திருவண்ணாமலை- 91.84
29. வேலூர்- 84.99
30. காஞ்சிபுரம்- 88.85
31. திருவள்ளூர்- 87.57
32. சென்னை- 92.99