தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம்!!
தமிழகத்தின் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முதல்வர் முன்னிலையில் இன்று துவங்க உள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
இதையடுத்து, பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவதுஎன்பது குறித்தும், பேரவைக்கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்தும் முடிவெடுக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டில் நிதியமைச்சராக இருந்த ஜெயக்குமார் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதற்கிடையில், இன்று மாலைஅ.தி.மு.க எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிஉறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது எப்படி போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இதேபோல் தி.மு.க எம்.எல்.ஏக்-கள் கூட்டம் அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் அவையில் முன்வைக்கப்பட வேண்டிய மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கடும் என தெரிகிறது.