நிர்பயா திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும் என்று இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.


இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட நிர்பயா திட்டத்தின் மூலம் அரசு பேருந்துகளில் ரூ. 75.02 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.


இதையும் படியுங்கள் :  தமிழக பட்ஜெட் 2020: எவ்வளவு நிதி ஒதுக்கீடு! முழு விவரம் உள்ளே!!


மேலும் ஏழைக்குடும்பங்களுக்கு அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் ரூ.250 கோடியில் செயல்படுத்தபட உள்ளது. இதன்மூலம், இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் . விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு, விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.