தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுருத்தன. அதில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் இடம் பெற்ற உள்ள சிறப்பம்சங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடி செலவில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் (Tamil Nadu Budget) அறிவித்துள்ளார். மேலும் சென்னையில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு ரூ.2,056 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வழிகளில் கழிவுநீர் தடுப்பு அமைக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


ALSO READ | TN Budget LIVE: தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது: நிதியமைச்சர்


மேலும் சென்னை மாநகராட்சி முழுவதும் போஸ்டர் கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் (PTR Palanivel Thiyagarajan) கூறியுள்ளார். அரசியல் கட்சி தொடங்கி சினிமா போஸ்டர்கள் என சென்னை முழுவதும் அனைத்து இடங்களிலும் போஸ்டர்கள் குவிந்து இருக்கும். பல நேரங்களில் இந்த வகை போஸ்டர்கள் நகரத்தின் அழகை கெடுக்கின்றன. இதனை தடுக்கும் வகையில் போஸ்டர் இல்லா சென்னை மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் சினிமா துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர். எளிய மக்களிடம் படங்களை கொண்டு செல்ல போஸ்டர்கள் தான் உதவியாக உள்ளன. இதனை தடுக்கும் விதத்தில் இந்த அறிவிப்பு உள்ளது என்று தங்கள் தரப்பு வாதங்களை தெரிவித்து வருகின்றனர்.


மேலும், சுற்றுப்புறம் மற்றும் சூழலுக்கு பாதிப்பின்றி சுரங்கப் பணிகளை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.


ALSO READ | TN Budget 2021: தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்- நிதியமைச்சர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR