TN Budget 2021: தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலத்தின் நிதிநிலை சிக்கலான நிலையில் உள்ளது என்றும், அரசு அறிவித்துள்ள அனைத்து நலத்திட்டங்களையும் படிப்படியாகவே செயல்படுத்த முடியும் என்றும் நிதி அமைச்சர் அவர்கள் ஏற்கனவே வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும்போது கூறியிருந்தார். சட்டமன்ற வரலாற்றிலேயே முதன் முதலாக காகிதமில்லா முறையில் இ பட்ஜெட் வடிவில்  இன்று தாக்கல் செய்யப்பட்டது.


இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், மகளிருக்கான திட்டங்கள் மற்றும் ஒதுக்கீடுகள் குறித்த விபரங்கள்:


மகளின் நலன் தொடர்பான அறிவிப்பில், மிக முக்கிய அறிவிப்பாக, மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு காலம், 9 மாதங்களிலிருந்து 13 மாதங்களாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, 2021, ஜூலை 1ம் தேதி முதல், முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 


இது தவிர திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியான, இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்துப் பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ''குடும்பத்தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவித்தொகை கிடைக்கும் என்பது தவறான புரிதல். உதவித் தொகை என்பது இல்லத்தரசிகளுக்கானது என்பதால், குடும்பத்தலைவர் பெயரை மாற்றத் தேவையில்லை எனவும், இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பின்னர், அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


மகளிருக்கான பிற திட்டங்களில், மகளிர் இலவச பயணத்திற்கு மானிய நிதி ஒதுக்கீடு ரூ.703 கோடி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Also Read | TN Budget 2021-22: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும்


மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,500 கோடி சிறப்பு கொரோனா கடன் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும். மேலும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இது தவிர, மகளிர் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ.762.23 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | TN Budget 2021 Update: தேர்தல் வாக்குறுதியான 1000 ரூபாய் குடும்பத்தலைவிகளுக்கு திட்டம் அமல்படுத்தப்படும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR