சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2021-2022 இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டமன்ற வரலாற்றிலேயே முதன் முதலாக காகிதமில்லா முறையில் இ பட்ஜெட் வடிவில்  இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இ பட்ஜெட்டினை பார்ப்பதற்கும், படிப்பதற்கும் வசதியாக சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கை முன் அவர்களுக்கு கணினி பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர டேப் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தினை ஏன் இன்னும் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் இன்று அது குறித்து நிதியமைச்சர் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.


Also Read | TN Budget 2021: சென்னை போஸ்டர் இல்லா நகரமாக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்


அதில் அவர் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் முறையில் அரசு ஈடுபட்டு வருகின்றது.எனவும் சிலர் குடும்பத்தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என தவறாக நினைக்கிறார்கள்.


இதன் காரணமாக குடும்பத் தலைவரின் புகைப்படத்தை மாற்றம் செய்கின்றனர். இது தவறான செயலாகும். கண்டிப்பாக இல்லத்தரசிகளுக்கான உரிமைத் தொகை நிச்சயம் அவர்களை வந்தடையும் என பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார்!


Also Read | TN Budget 2021-22: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும்