சென்னை: இந்த ஆண்டு முதன்முறையாக தமிழகத்தில் வேளான் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. வருகிற 13 ஆம் தேதி நடக்கவிருக்கும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, வேளான் பட்ஜெட் குறித்து அரசின் மீது உள்ள எதிர்பார்ப்புகள் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவான எதிர்பார்ப்புகள்:


- வேளான் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது விவசாயத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு சுமார் 2.5 சதவிகிதமாக உள்ளது. இது விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கைக்கு விகிதாசார முறையில் முற்றிலும் பொருந்தாமல் உள்ளது.


- வேளான் துறைக்கான ஒதுக்கீடு அந்த துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் மற்றும் துறைக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


- ரேஷன் கடைகளில் (Ration Shops), இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த நிலைமை இருப்பது பரிதாபமாக உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.


ALSO READ: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: முக்கிய அம்சங்கள் இதோ


- அதற்கு பதிலாக, மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை அரசு மானிய விலையில் வழங்கலாம் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.


- விவசாயிகளின் கடன்களுக்கான செயல்முறை எளிதாக்கப்பட வேண்டும். விவாயிகள் கடன்களுக்காக அலைகழிக்கப்படுவது தவிர்க்கபப்ட வேண்டும்.


- சாகுபடி செலவு மற்றும் விவசாயிகளின் (Farmers) லாபத்தை கணக்கிட்டு விவசாய பொருட்களின் விலைகளை அரசு நிர்ணயிக்க வேண்டும்.


- விவசாயத் துறைகளுக்கான சில மாற்றங்களை மத்திய அரசால் தான் செய்ய முடியும்.


- கூடுதலாக, விவசாயம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் உள்ளாட்சி அமைப்புகளால் கையாளப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மாநில அரசு கையாளும் செயல்முறை உருவாக்கப்படலாம்.


விவசாயிகளின் நலனுக்காகவும் விவசாயத் துறைக்கு உள்ள முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையிலும், வேளான் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் (TN Budget) மூலம் விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்ந்து அவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 


ALSO READ: TN Budget மின்ன‌ணு முறையில் தாக்கல் செய்யப்படும் : சபாநாயகர் அப்பாவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR