சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றிம் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது இருக்கும் ஊரடங்கு வரும் 28 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று தெரிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், நீட்டிக்கட்டுள்ள ஊரடங்கில் (Lockdown) கூடுதலாக பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் கூடுதலாக இன்னும் பல மாவட்டங்களில் பொதுப் பேருந்து சேவைகள் துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 


வரும் 28 ஆம் தேதி முதல் ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் , கூடுதலாக 23 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 27 மாவட்டங்களில் 9,333 பேருந்துகள் இயக்கப்படும் என இன்று அரசு தெரிவித்துள்ளது. 


திங்கட்கிழமை, அதாவது ஜூன் 28 ஆம் தேதி முதல், 27 மாவட்டங்களில் 50% இருக்கைகளுடன் காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று அறிவித்தார்.


அனுமதிக்கப்பட்ட 27 மாவட்டங்களுக்கு இடையே திங்கள் முதல் தொலைதூர பேருந்துகள் (Public Transport) இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 


ALSO READ:TN Lockdown: ஜூலை 5 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மு.க. ஸ்டாலின் 



பேருந்து இயக்கம் குறித்த விரிவான தகவலை போக்குவரத்துத் துறை இன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில், அரசு விரைவுப் பேருந்துகள், சார்புடைய போக்குவரத்துக் கழகங்கள் 50% பயணிகளுடன் வரும் 28 ஆம் தேதி காலை 6 மணி முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுமட்டுமின்றி சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் (Chennai) பேருந்து போக்குவரத்துத் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


தற்போது இயக்கப்படவுள்ள பேருந்துகளை உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்குமாறு அறிவிப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களும் அரசு விதித்துள்ள வழிகாட்டு முறைகளான, முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவற்றை கடைபிடித்து பயணித்திடுமாறும் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


ALSO READ:Breaking News! சென்னை SBI ATM இயந்திரங்களில் பணத் திருட்டு; மற்றொருவர் கைது 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR