புதுடெல்லி: எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை தொடர்பாக மேலும் ஒருவர் கைது. சென்னையில் பல எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளை நடத்திய அமீர் என்பவர் ஏற்கனவே ஹரியானாவில் கைது செய்யபட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இன்று டெல்லியில் வீரேந்தர் என்பவர் கைது செய்யப்பட்டார். ஏடிஎம்களில் பணத்தை கொள்ளையடித்த விவகாரம் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் வீரேந்தர் என்பவன் மறைந்திருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், அவனை கைது செய்தனர். ஏற்கனவே கைதான அமீரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் டெல்லியில் வீரேந்திர் கைது செய்யப்பட்டார்.
Also Read | சென்னை SBI ஏடிஎம் இயந்திரங்களில் பணம் திருடியவர்களில் ஒருவர் கைது
ஹரியானாவின் மேவாட் பகுதியை சேர்ந்தவர் வீரேந்தர் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட வீரேந்தர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR