வரும் 21 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அதாவது தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி (Nanguneri), விக்கிரவாண்டி (Vikravandi) தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பாக வெ.நாராயணனும், காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன் போட்டியிடுகின்றனர். தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், இன்று திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பாக களம் இறக்கப்பட்டு உள்ள வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் திமுக ஆட்சியின் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில் மக்களுக்காக எந்தவித நல்ல திட்டமும் செயல்படுத்த வில்லை எனக் கடுமையான குற்றச்சாட்டுகளை எடப்பாடி தலைமையிலான அரசின் மீது சுமத்தினார். 


 



நீட் தேர்வு குறித்து மேலும் பேசிய அவர், தமிழகத்திற்குள் நீட் வந்ததற்கு எடப்பாடி பழனிசாமி அரசு தான் முக்கிய காரணம். அவருக்கு மாணவர்களை குறித்து எந்தவித கவலையும் இல்லை. நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை படிக்க முடியவில்லை. அதனால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.


முதலில் நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழைத்த போது, அதை மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்தார். அதனால் தான் நீட் தமிழகத்திற்கு வரவில்லை என ஜெயலலிதாவை பாராட்டினார்.