அரவக்குறிச்சியில் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சார களத்தில் எடப்பாடி பழனிச்சாமி
இன்றைய பிரச்சாரத்தில், அரவக்குறிச்சியில் போட்டியிடும் தமிழக பாஜக துணைத் தலைவர் கே. அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாக, முதல்வர் கே.பழனிச்சாமி களத்தில் இறங்கினார்.
தமிழக தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் இரு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், வக்காளர்களை கவர, முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய பிரச்சாரத்தில், அரவக்குறிச்சியில் போட்டியிடும் தமிழக பாஜக துணைத் தலைவர் கே. அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாக, முதல்வர் கே.பழனிச்சாமி களத்தில் இறங்கினார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) ஆசி பெற்ற வேட்பாளரான அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பாஜகவின் அடிமையாக உள்ளது என்ற குற்றசாட்டிற்கு கடுமையாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanaisamy), அவர் வேண்டுமானால் அடிமையாக இருக்கலாம் நாங்கள் அடிமையல்ல, அதிமுக- பாஜக கூட்டணி வலுவான் வெற்றிக் கூட்டணியாக உள்ளது. மாநில அரசு கொண்டு வரும் எந்த திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி உதவி தேவை. அதனால், மத்தியில் உள்ள அரசோடு இணக்கமாக பணியாற்றினால் தான் மாநிலத்திற்கான வளர்ச்சி திட்டங்கள் மேம்பாட்டி திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றார்.
அரவக்குறிச்சி மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றாத எம் எல் ஏ செந்தில் பாலாஜி, இப்போது அரவக்குறிச்சியை விட்டு கரூருக்கு தாவியுள்ளார் என கடுமையாக குற்றம் சாட்டினார்.
இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் ,அரவக்குறிச்சிக்கு பிறகு பரமத்தி, வேடசந்தூர், ஒட்டம்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, ஆத்தூர்ம் திண்டுக்கல், நத்தம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.
நாளை மதுரை கிழக்கு, சோழவந்தான், அலங்காநல்லூர், திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் பிராச்சாரம் செய்வார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR