முதலமைச்சரான பின் முதன்முறையாக நாளை திருவாரூர் செல்கிறார் மு.க.ஸ்டாலின்
திருவாரூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்கிறார்.
சென்ற ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்ட மன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்னர் முதல்முறையாக நாளை திருவாரூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். திருவாரூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் , 10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. வெற்றி பெற்ற பின், தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் கடந்த மே மாதம் 7 ஆம் தேதியன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
Also Read | தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் பிறந்த ஊரான திருவாரூருக்கு, நாளை மதியம் சாலை வழியாக செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மறைந்த கருணாநிதி அவர்களின் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்.
அதன் பின்னர், காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கும் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். பின்னர், பயணத்தை முடித்து விட்டு நாளை மறுநாள் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தாக்கம் இன்னும் முழுமையாக கட்டுபாட்டில் வராத நிலையில், கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் திருவாரூக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் சீற்றம் தணிந்து 4000 என்ற எண்ணிக்கு குறைவாக புதிய தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு, ஊரடங்கு மற்றும் பல வித தொற்று பரவல் நடவடிக்கைகள் காரணமாக மெல்ல குறையத் தொடங்கியது.
ALSO READ | எங்களுக்கு மத்திய அரசுதான்; பெயரை மாற்றியதால் என்ன பயன்: அன்புமணி ராமதாஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR