எங்களுக்கு மத்திய அரசுதான்; பெயரை மாற்றியதால் என்ன பயன்: அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசிற்கான 2021 - 2022 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இன்று வெளியிட்டது.  ஆண்டுதோறும் வேளாண் நிதி நிலை அறிக்கை மற்றும் பொது நிழல் நிலை அறிக்கைகளை அக்கட்சி வெளியிடும். இந்த நிகழ்வுக்கு பின்னர் பாமக (PMK) கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி செய்தியாலர்களிடம் பேசினார்.

Last Updated : Jul 5, 2021, 02:56 PM IST
  • ஆண்டுதோறும் வேளாண் நிதி நிலை அறிக்கை மற்றும் பொது நிழல் நிலை அறிக்கைகளை அக்கட்சி வெளியிடும்.
  • பாமக கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி செய்தியாலர்களிடம் பேசினார்.
எங்களுக்கு மத்திய அரசுதான்; பெயரை மாற்றியதால் என்ன பயன்: அன்புமணி ராமதாஸ் title=

தமிழக அரசிற்கான 2021 - 2022 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இன்று வெளியிட்டது.  ஆண்டுதோறும் வேளாண் நிதி நிலை அறிக்கை மற்றும் பொது நிழல் நிலை அறிக்கைகளை அக்கட்சி வெளியிடும். இந்த நிகழ்வுக்கு பின்னர் பாமக (PMK) கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி செய்தியாலர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அன்பு மணி ராமதாஸ், ”எங்களைப் பொறுத்தவரையில் மத்திய அரசு என்றுதான் நாங்கள் அழைப்போம். பெயரை மாற்றி அழைப்பதால், எந்த பயனும் இல்லை, எதுவும் நடக்கப்போவதில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக  தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், தற்போது தேதி ஏதும் நாங்கள் சொல்லவில்லை என்கின்றனர். அது ஆக்கப்பூர்வமான கருத்து இல்லை. தற்போதைய சூழ்நிலையில், ஒன்று அல்லது இரண்டு ரூபாய் வரை குறைக்கலாம். தமிழக அரசு பொருளாதார நிபுணர்கள் குழு அமைத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம், எனக் கூறினார்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசை ஒன்றிய அரசு ஒன்று அழைப்பதை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சட்டப்பேரவையில், பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin), ஒன்றிய அரசு என்பதை பயன்படுத்துவது சமூக குற்றம் அல்ல எனவும், அதனை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

ALSO READ | PMK:2021 - 2022ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது 

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தொடர்ந்து ஒன்றிய அரசு என அழைத்து வருவது தொடர்பாக அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்,  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார். 

Also Read | மேகதாது அணை விவகாரம்; தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தில்லி பயணம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News