கோவை உக்கடம் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வியாழக்கிழமை மாலை  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி முதலில்  படித்த சின்மயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி,  தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் துறையினர், இயற்பியல்  ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 


போலீஸ் விசாரணை வளையத்தில் இருந்த ஆசிரியர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தபட்டு  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


ALSO READ | கோவை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்.எஸ்.புரத்தில் பள்ளி முற்றுகை போராட்டம்


இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், "கோவை மாணவியின் மரணம் மனதை மிகவும் வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் இருப்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிச்சயம் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!" என்று குறிப்பிட்டுள்ளார். 


முன்னதாக, கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியும், அத்துடன் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மாணவியின் பள்ளி தோழர்கள் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மாணவியின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


ALSO READ | பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR