கோவை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்.எஸ்.புரத்தில் பள்ளி முற்றுகை போராட்டம்

பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு கோவை பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டம், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்யக் கோரி வலுக்கும் போராட்டம்...

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 12, 2021, 09:19 PM IST
  • கோவை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்
  • பள்ளி முற்றுகை போராட்டம்
  • ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் போராட்டம்
கோவை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்.எஸ்.புரத்தில் பள்ளி முற்றுகை போராட்டம்

பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த  நிலையில் மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு பள்ளியின் முன்புறம் அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் முற்றுகையில் ஈடுபட்டனர். 

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, கோயம்புத்தூரில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Also Read | ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை? உறவினர்கள் குற்றச்சாட்டு

கோவை கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரனின் 17 வயது மகள் பொன் தாரணி. 11ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்த பொன் தாரணி, அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி அம்மணியம்மாள் பள்ளிக்கு மாறினார். அந்த பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டின் உட்புறமாக தாழிட்ட மாணவி பொன் தாரணி, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளின் தற்கொலை குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர். இதனிடையே மாணவி பொன் தாரணி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ALSO READ பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்

More Stories

Trending News